மட்டு.ரிதிதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் ரிதிதென்ன பிரதேசத்தில் இன்று  புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஹஸரத் வீதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான  முஹம்மது இஸ்மாயில் முஹம்மது சரீப் நௌபர் (வயது 24) என்பவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வேகமாக வந்த வான் ஒன்று மோதி இந்த  விபத்து  இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் பின்னர் குறித்த வான் நிற்காமல் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த  விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.