அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

(லியோன்)   

மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக திருக்குட திருமஞ்சன பெருஞ்சாந்தி மஹா கும்பாபிஷேக நிகழ்வு 13.04.2014 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும்.

இதற்கான ஆலய ஆரம்ப நிர்மான பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது வர்ண பூச்சு வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

ஆலய கும்பாபிஷேக ஆரம்ப கிரிகைகள் 09.04.2014  திகதி புதன் கிழமை காலை 07.00 மணியில் இருந்து ஆரம்ப கிரிகைகள் தொடர்ந்து இடம்பெறும்.

அதனை தொடர்ந்து 11.04.2014  வெள்ளிக் கிழமை மாலை 04.00 மணிக்கு அம்பாள் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக ஆலயத்தை வந்தடையும்.  12.04.2014 சனிக்கிழமை  காலை 08.00 மணி முதல் பால் காப்பு நிகழ்வு இடம்பெறும். 

இதனை தொடர்ந்து 13.04.2014 ஞாயிற்றுக் கிழமை  காலை 09.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை உள்ள சுப வேலையில் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெறும்.  ஆலய விழா காலங்களில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.