சர்வதேச வலதுகுறைந்தோர் தினத்தினை முன்னிட்டு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில்

(எஸ்.பாக்கியநாதன், தனு)

சமூகத்தில் தடைகளை தகர்ப்போம் கதவுகளைத் திறப்போம் எனும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றன.
சர்வதேச வலது குறைந்தோர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறன் சிறுவர்கள் முத்து கோர்த்தல், தடை தாண்டல், நீர் நிரப்புதல் உள்ளிட்ட ஏழு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

ஓசாணம், மென்கபே, புகலிடம், தரிசனம், சுகைறா பாடசாலை, வாழ்வகம் உள்ளிட்ட 10 அமைப்புகளை சேர்ந்தோர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே. குருநாதன் ஆகியோர் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவில் கெண்டிகப், கெமிட் என்பன இணைந்து இப்கோட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன.