பல வெளியீடுகள் நேர்த்தியான முறையில் சர்வதேசத்துடன் ஒன்றிக்ககூடிய வகையில் வெளிவந்துகொண்டிருப்பது அனைவரது கவனத்தினையும் ஈர்ப்பனவாகவுள்ளது.
அதிலும் முக்கியமாக சமூக சிந்தனையுடன் குறும்படங்கள் வெளி வந்துகொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கவையாகவுள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பை சேர்ந்த இளம் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டுள்ள குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளின் வெளியீட்டு விழா இன்று காலை மட்டக்களப்பு கோப் சென்ற்றர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் எம்மவர்களால் உருவான நேர்கோடு, ளுரiஉனைந, நரகம்,வண்ண ஓவியம் ஆகிய குறும்படங்களும் மட்டு, காதல் சொன்னேன் ஆகிய இசை காணொளிகளும் திரையிடப்பட்டு வெளியிடப்பட்டன.
மட்டக்களப்பின் வரலாற்றில் முதல் முறையாக படைப்பாளின் குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளின்; ஐந்து வெளியீடுகள் ஒரே தடவையில் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாக சாதனைய படைத்துள்ளது.
மேலும் இவற்றின் இறுவட்டு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்,மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எமது கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.




