தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தரும் தொழிலதிபருமான தியேட்டர் மோகன் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கூடிய மத்திய குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிவ ட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தற்காலிக இடைநிறுத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தியேட்டர் மோகன் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே கட்சியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சிவ ட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் தியேட்டர் மோகனை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அவரது தொடர்பை பெறமுடியவில்லை.
