இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஆசிரியர் கலாசாலையில் பேராசிரியர் மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
மட். மகாஜனா கல்லூரி மண்டபத்தில் நாளை முதல் நான்கு அமர்வுகளாக இவ்விழா நடைபெறவுள்ளது.
புலவர்மணி ஏ. பெரியதம்பிள்ளை அரங்கில் விழாச்சபைத் தலைவர் பேராசிரியர் சி. மௌனகுரு தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும்.
இந் நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். ரீ. ஏ. நிசாம், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் டி. டபிளியூ. யூ. வெலிகல்ல, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே. சிவநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கௌரவ விருந்தினர்களாக வலயக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி சுhப சக்கரவர்த்தி, கே. பாஸ்கரன், திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், எஸ். ஸ்ரீகிருஸ்ணராஜா, ஜனாப் ஏ. எம். அகமட் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்வாக அமையும் இவ் அமர்வில், பாடசாலை மாணவ மாணவிகளின் நடன நாடக, கலை நிகழ்வுகள நடைபெறுவதுடன், விசேட சொற்பொழிவுகளும் இடம்பெறும்.
அத்துடன், முதல்நாள் இரண்டாம் அமர்வு பிற்பகல் 3 மணிக்கு இலக்கியக்கலாநிதி வித்துவான் கமலநாதன் அரங்கில் நடைபெறும்.
மறுநாள் சனிக்கிழமை காலை நடைபெறும் மகா வித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராஜா அரங்கில்; கடந்த ஐம்பது ஆண்டு கால தமிழியல் வளர்ச்சிப் போக்குகள் என்ற தலைப்பில் ஆய்வரங்கு பேராசிரியர் எம்.ஏ.நுக்மான் தலைமையில் நடைபெறும்.
இதில், சமூகம் பற்றி தலைப்பில் ஆசிரியம் இதழ் ஆசிரியர் தெ. மதுசூதனன், மொழி பற்றி ஊவா வெல்லஸ பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. ரூபவதனன், இலக்கியம் பற்றி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர் திருமதி வானதி பகிரதன், பண்பாடு பற்றி தென்கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச. ரகுபரன், கலை பற்றி கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் எஸ். இன்பமோகன் ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பர்.
சனிக்கிழமை மாலை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கில் நடைபெறும் இறுதி நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி. கிட்ணன் கோபிந்தராஜா கலந்து கொள்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக -சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி. கே. பிரேமகுமார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். பாஸ்கரன், ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கக பீடாதிபதிகளும் கலந்து கொள்வர்.
இவ் இறுதி நிகழ்வில், நாட்டுக்கூத்து, நாடகங்கள், பண்பாட்டு நடனங்கள், இறுவட்டு வெளியீடு என்பனவும் நடைபெறும்.