பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடங்களையும் சார்ந்த அனைத்து வருட மாணவர்களுக்கும் 11முதல் 17வரை விடுமுறை வழங்கப்படுவதாக பதிவாளர் கே.மகேசன் அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில்,
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை முன்னிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரின் வேண்டுகோளின் பிரகாரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சார்ந்த அனைத்து வருட மாணவர்களுக்கும் எதிர்வரும் 11.11.2013 அன்று முதல் 17.11.2013 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் தத்தமது விடுதிகளை விட்டு எதிர்வரும் 10.11.2013 அன்று மாலை 6.00 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
