சுற்றாடல் முன்னோடி படையணிக்கான பதக்கம் கூட்டும் விழா
பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஒன்றான மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஸ்ண வித்தியாலயத்தில் அதிபர் வே.ஜெயரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வித்தியாலய நுழைவாயிலில் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். பின்னர் கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுற்றாடல் படையணிக்கான பதக்கங்கள் சூட்டப்பட்டது.
இப்பதக்கங்களை வெல்லாவெளிப் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் திலக்குமார மற்றும் வித்தியாலய அதிபர் சுற்றாடல் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் சூட்டினர்.தொடர்ந்து நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு அதிதிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றப்பட்டு மாணவிகளால் தேவாரம் பாடப்பட்டது.பின்னர் வரவேற்பு உரையினை பிரதி அதிபர் செல்வி.வ.ஜெயந்தி நிகழ்த்தினார்.
அதனைத்தொடந்து வித்தியாலய அதிபர் தனது உரையில், இந்த சுற்றாடல் முன்னோடி படையணிகளின் செயற்பாடுகள் தொடர்பில்; விளக்கவுரையாற்றினார்..
இன் நிகழ்விற்கு சுற்றாடல் உத்தியோகத்தர்களான.யோகராசா, எம்.சதீஸ்குமார் பொலிஸ் உத்தியோகத்தர் திலக்குமார மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உப தலைவர் கு.ஜதிஸ்குமார் செயலாளர் திரு.செ.திருக்குமார் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் போது மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.