பாடசாலை மாணவர்கள் மத்தியில் சாரணர் நடவடிக்கையினை மேம்படுத்த இதன் மூலம் சாரணர் பயிற்சி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் இ.ஆனந்தராஜாவின் வழி காட்டலில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட புதிய சாரணர் மாணவர்களுக்கான சாரணர் ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று(9.11.2013)சனிக்கிழமை காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாலமுனை அலகார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் சாரண தலைவர் ஐ.எல்.எம்.முஹ்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமின் ஆரம்ப வைபவத்தில் சாரணர் பயிற்றுவிப்பாளர்களான ஏ.புட்கரன், மற்றும் பி.மேகவன்னன், ஆசியர்களான எம்.கையூம், எம்.அப்துர் றஹ்மான் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை, மற்றும், அல் ஹிறா மகா வித்தியாலயம், பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம், பாலமுனை அஸ்ரப் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 70 புதிய சாரணர் மாணவர்கள் பங்கு பற்றினர். இவர்களுக்கு சாரணர் ஆரம்பக் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.