மட்டக்களப்பு வலையிறவுப்பாலத்தின் திறப்பு விழா வைபவத்திற்கு மீள் குடியேற்ற பிரதியைமச்சர் முரளிதரன் அழைக்கப்படாததை கண்டித்து திங்கட்கிழமை (28.10.2013) சிலர் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் கிழக்கு மாகாண விதுp அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மானிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா நடைபெற்ற வைபவத்தின் போது பாலத்திலிருந்து சற்று தொலைவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் அம்மான் எங்கே, மட்டு மண்ணின் மைந்தன் அழைக்கப்படவில்லையா, மாவட்ட அமைச்சருக்கு அழைப்பில்லாமல் திறப்புவிழாவா என்பன போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். இந்த பதாகைகள் பாலத்திற்கு செல்லும் வழியிலும் கட்டப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டததை விவசாயிகள் மற்றும் மட்டக்களப்பு வர்த்தகர்கள் செய்வதாக அந்த பதாதையில் குறி;ப்பிடப்பட்டிருந்தது.