வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டியில் கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தினை சேர்ந்த இளையோர் அணி வெற்றிபெற்றது.
ஏழு அணிகள் கொண்டதாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தினை சேர்ந்த இளையோர் அணி மற்றும் மூத்த அணியினர் மோதினர்.
இதன்போது இளையோர் அணியினர் வெற்றிபெற்றனர்.இந்த கண்காட்சி சுற்றுப்போட்டியில் ஏழு அணிகள் பங்குகொண்டன.
இறுதிப்போட்டி நிகழ்வானது பாடசாலை ஆசிரியர் ஜீவரெட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரும் முன்னாள் பட்டிப்பளை பிரதேச செயலாளருமான சிவநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடுக்கமுனை வாணி வித்தியாலய மகளிர் உதைபந்தாட்ட அணியினர் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் இரண்டாம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.