வாகரை பிரதேசத்தில் ரொக்கட் லோஞ்சர் ரக குண்டொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீடகப்பட்டுள்ளது.
நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 40 மில்லி மீற்றர் ரக ரொக்கட் லோஞ்சர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை கோமந்தமடு களப்பு வீதியில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் பற்றைக் காட்டை வெட்டி துப்பரவு செய்யும் பணியில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று குண்டினை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.