செட்டிபாளையம் அருள் மிகு ஸ்ரீநித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலய தீர்த்தோற்சவம் பெருமளவான அடியார்கள் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட செட்டிபாளையம் அருள் மிகு ஸ்ரீநித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற முருகன் ஆலயமாகவும் பண்டைய ஆலயங்களுல் ஒன்றாகவும் கருதப்படும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆகம விதிகளுக்கு அமைய சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

கடந்த 16 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

10தினங்களாக இடம்பெற்றுவரும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இன்று காலை தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை கும்பபூசை,மூலஸ்தான்பூசை,தம்ப பூசை இடம்பெற்று சுண்ணம் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி தீர்த்த உற்சவத்துக்காக வீதியுலா சென்று சமுத்திரத்துக்கு சென்றார்.

சமுத்திரத்தில் வேலுக்கு விசேட பூசைகள் மற்றும் அபிஸேகம் செய்யப்பட்டு தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த தீர்த்த உற்சவத்தில் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.