பெரியகல்லாறு பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற திருமண வீடு ஒன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு உணவு விசமாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை தொடக்கம் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பிராந்திய அத்தியட்சர் காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் வாந்திபேதி,வயிற்றோட்டம் ஆகிய நோய்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
