இன்று காலை பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி இடம்பெற்றது.
இந்த பால்குட பவனியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பால்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும்; ஆலயத்தில் உள்ள எழுந்தருளி அன்னை ஆலய முன்றிலில் வைக்கப்பட்டு விசேட பூசைகள் இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து பால்குட பவனியில் பால்குடங்களை தாங்கி வந்தோர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
பாலாபிஷேகத்தினை தொடர்ந்து சக்தி மகா யாகம் இடம்பெற்றதுடன் மூலமூர்த்தியாக உள்ள அன்னைக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அன்னைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் தேவபராயனங்கள் ,அன்னை தாலாட்டு என்பன பாடப்பட்டது.
இந்த நிகழ்வில் மகேசுர பூசையும் சிறப்பாக இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பெருமளவான ஆடியார்களும் கலந்துகொண்டனர்.