மட்டக்களப்பிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவுஸ்ரேலியத் தூதரக அதிகாரிகள் மற்றும் பிளான் ஸ்ரீ லங்கா நிறுவன அதிகாரிகள் வவுணதீவுப் பிரதேச இளைஞர் யுவதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட இவர்கள் பிளான ஸ்ரீ லங்கா அதிகாரிஜகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் சகிதம் வவுணதீவுப் பிரதேசத்திற்கு வஜயம் மேற்கொண்டு அங்குள்ள இளைஞர் யுவதிகளது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
வவுணதீவுப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார் தலைமையிலான வவுணதீவுப் பிரதேச இளைஞர் யுவதிகள் அடங்கிய குழுவினரை நெல்லூர் நடேசா வித்தியாலயத்தில் வைத்துச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதரக அதிகாரிகள் இந்தியாவிற்கான அவுஸ்ரேலியத் தூதரக அதிகாரி,பிளான் ஸ்ரீ லங்கா இலங்கைக்கான பிரதிநிதி எட்வாட் நெட் எஸ்பி,ஆகியோர் பிளான் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் டேவிட் சதானந்தம்,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ்,பிளான் ஸ்ரீ லங்கா நிறுவன மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் செல்வி க.வன்னிரமா சகிதம் சந்தித்து பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
வவுணதீவுப் பிரதேச இளைஞர்கள் சார்பாக வவுணதீவப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனப் பிரதிநிதிகள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்,இளைஞர் கழகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவு படுத்தியுள்ளனர்.