கணிய அளவீடு அலகு, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், நிர்மாண தொழில்நுட்பம் ஆகிய நான்கு கற்கை நெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த.உயர்தரத்தில் சித்தியடைந்த 18 வயது முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் இக்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி மூலமான இக்கற்கை நெறிகள் 3 வருடங்களை கொண்டதாகும்.
கற்கை நெறிகள் யாவும் இலங்கை பல்கலைக்கழக கல்லூரியின் காத்தான்குடி வளாகத்தில் இடம்பெறும். பல்கலைகழக பேராசிரியர்கள், துறைசார் விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்படும்.
இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு இலங்கை தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கு உட்புகும் தகைமைகிடைக்கும்.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை எதிர்வரும் 2.9.2013 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறு கோரபட்டுள்ளனர்.
விண்ணப்ப படிவங்களை பணிப்பாளர், மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி, ஹிஸ்புல்லாஹ் மைதானவீதி, காத்தான்குடி எனும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாமென அவர் மேலும் தெரிவித்தார்.
