சம்மாந்துறையில் மாபெரும் கல்வி கண்காட்சி

 (நடனம் )

சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கண்காட்சியின்  நிகழ்வு 2ம் திகதி செவ்வாய்க்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் அல்மர்ஜான் பாடசாலையில் இடம்பெற்றது.

 
து இதில்32 கண்காட்சிக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் பாடசலை கல்வி தொடர்பான 19 கூடங்களும் வெளியார் சார்பான 13 கூடங்களும் நிறுவப்பட்டுள்ளன.
   
அதாவது தேசிய தொழிற்பயிற்சிஅதிகாரசபை,தேசிய நீர் சுத்திகரிப்புநிலையம்,தேசியமனிதஉரிமை ஆணைக்குழு,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை,இளைஞர் பாராளுமன்றம்,பால்குளீரூட்டும் நிலையம்,செவிப்புலனற்றோர்.

கல்விநிலையம்,வங்கிநடைமுறை,அமானாவங்கிஆயுர்வேதநிலையம்,விதாதவளநிலையம் உட்பட கணிதம், ஆரம்பக்கல்வி வி ்ஞானம், தமிழ்,ஆங்கிலம்,விவசாயம்,இந்துசமயம்,இஸ்லாம்,புவியியல்,மனைப்பொருளியல்,வர்த்தகம்,தகவல்தொழில்நுட்பம்,ஆலோசனைவழிகாட்டல் அடந்கலாக 32 கூடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில்கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான த.கலையரசன் மற்றும் அமீன் ஆகியோர்  மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்ள், அதிபர்கள்,வலயத்தில் உள்ள பல ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் .