வந்தாறுமூலையிலுள்ள தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் பட்டிப்பளை, வாகரை, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, வவுணதீவு, கிரான், ஆரையம்பதி, ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை, வெல்லாவெளி, கல்லடி போன்ற பிரதேசங்களிலுள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் 36 பயிற்சிநெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிகளுள் தேசிய சான்றிதழ் மட்ட கற்கைகளான அலங்கரிப்பாளர், சிகை அலங்கரிப்பாளர், இயந்திரவியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், முச்சக்கர வண்டி திருத்துனர், மின் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், தொழில்சார் தையல், கட்டடக் கைவினைஞர், மரக் கைவினைஞர், படகு இயந்திர தொழில்நுட்பம், அலுமினியம் பொருத்துனர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தையல் கலைஞர், ஒட்டுவேலை செய்பவர், கட்டிடக் கைவினைஞர் ஆகியவையும் உள்ளடங்குகின்றன.
இவற்றுள் பெருமளவானவை தேசிய தொழில்சார் தகமை (என்.வி.கியு.) மட்டம் 3 மற்றும் 4 அடிப்படையிலானதும் 3 மற்றும் 6 மாத பயிற்சிக் காலத்தைக் கொண்டவையுமாகும். விண்ணப்பங்களை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம், ஏ.பீ.சீ. வீதி, வந்தாறுமூலை என்ற முகவரிக்கு அனுப்ப முடியும்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 தொழிற்பயிற்சி நிலையங்களினால் நடாத்தப்படும் 47 பயிற்சிநெறிகளுக்கு பயிலுனர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் அண்மையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
