மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஒன்றசேர்ந்து உருவாக்கிய விமானம் அரசபடையினரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை நேற்று செங்கலடி பிரதேசத்தில் சில மாணவர்கள் விமானத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர்களை இரானுவத்தினர் விசாரனைக்கு என செங்கலடி - மயிலம்பாவெளி இரானுவமுகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின் பல மணிநேர விசாரனையின் பின் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாடசாலை செயற்றிட்டத்திக்காக செய்யப்பட்ட விமானம் தமிழ் விடுலைப்புலிகளுக்காக தயாரிக்கப்படுகிறது எனும் சதேகத்திலேயே இவர்கள் விசாரனை செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுவிக்ப்பட்ட மாணவர்ளை செய்தியாளர்கள் தொடர்புகொண்ட போது இவர்கள் இது தொடர்பாக கருத்து தொரிவிக்க முன்வரவில்லை.
தொடர்ந்தும் மாணவர்கள் இவ் விமானத்தயாரிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரியவந்துள்ளது.
