அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
12-08-1990ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையிரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ஆலயம் மற்றும் பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தி சுமார் 85க்கும் அதிகமான மக்களை படுகொலைசெய்த நாளினைக்குறிக்கும் வகையில் இந்த வீரமுனை படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
12-08-1990ஆம் ஆண்டு வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் மீது விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த மிலேச்சத்தனமாக படுகொலை நடாத்தப்பட்டது.
வெட்டியும் சுட்டும் தாக்கியும் சுமார் 85க்கும் அதிகமானோர் இதன்போது படுகொலைசெய்யப்பட்டனர்.இதன்போது படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருந்தனர்.
அவர்களுக்கு இதுவரையில் என்ன நடந்தது என்ற நிலை இதுவரையில் தெரியாத நிலையில் 36 வருடங்களை கடந்துள்ளபோதிலும் வீரமுனை படுகொலைக்கு இதுவரையில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் வீரமுனையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வீரமுனை மக்களால் நடாத்தப்பட்டது.
இன்றைய தினம் வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள படுகொலை நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
1990ஆம் ஆண்டுகளில் வீரமுனை, வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, மல்வத்தை, புதுநகர், கணபதிபுரம், கோரக்கர்கோயில், மல்லிகைத்தீவு மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதி மக்கள் வீரமுனை பாடசாலை மற்றும் சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
இதன்போது ஊர்காவலம் படையினர் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரினால் திடீர் திடீர் என சுற்றிவளை;ககப்பட்டு பலர் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே 12-08-1990ஆம் ஆண்டு வீரமுனைக்குள் இந்த படுகொலை நடாத்தப்பட்டன.
இன்று காத்தான்குடி படுகொலை மற்றும் ஏறாவூர் படுகொலை தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் வீரமுனை படுகொலை தொடர்பில் பேசுவதற்கு முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20.06.1990 தொடக்கம் 12.08.2026 ஆண்டுவரையில் உயிரிழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாகப் பதிவான தமிழ் மக்களின் பெயர் பட்டியல்.இந்த பெயர் பட்டியலில் பலரின் பெயர்கள் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.இது தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
1. சிவஞானம் கணேசன் — வீரமுனை
2. தங்கராசா உதயசூரியன் — வீரமுனை
3. நாகலிங்கம் தியாகராசா — வீரமுனை
4. கந்தவனம் ஆறுமுகம் — வீரமுனை
5. அழகையா சாமித்தம்பி — வீரமுனை
6. கதிரேசப்பிள்ளை சந்திரசேகர் — மல்வத்தை
7. அம்பாரக்குட்டி தியாகராஜா — புதுநகர்
8. பாண்டியன் முனியாண்டி — புதுவளத்தாப்பிட்டி
9. சாமித்தம்பி சுப்பிரமணியம் — வீரமுனை
10. செல்லையர் அசோகன் — வீரமுனை
11. P. நந்தசிறி — வளத்தாப்பிட்டி
12. சிவசம்பு தேவராசா — வீரமுனை
13. சின்னத்தம்பி அண்ணாதாசன் — மல்வத்தை
14. மார்க்கண்டு சிவானந்தன் — வீரமுனை
15. கந்தவனம் சோமசுந்தரம் — வீரச்சோலை
16. கந்தவனம் குமார் — வீரச்சோலை
17. வைரமுத்து சிவம் — வீரமுனை
18. செல்லையா கிருஸ்ணபிள்ளை — வீரமுனை
19. நாகலிங்கம் தவராசா — வீரமுனை
20. இராசலிங்கம் அழகையா — வீரமுனை
21. கந்தையா திசாநாயக்க — வீரமுனை
22. இளையதம்பி கணபதிப்பிள்ளை — மல்வத்தை
23. கந்தக்குட்டி தருமலிங்கம் — வீரச்சோலை
24. சின்னையா முத்தையா — கணபதிபுரம்
25. வு. மாதவன் — அம்பாறை
26. நவசிவாயம் தேவராசா — அம்பாறை
27. யு. சிவநேசன் — அம்பாறை
28. ஆ. முத்துக்குமார் — அம்பாறை
29. ஆ. அருள்மணி — அம்பாறை
30. யு.நு. தேவதாசன் — அம்பாறை
31. ளு. மனோகரன் — அம்பாறை
32. யு.யு. சண்முகவேல் — அம்பாறை
33. N. சந்திரகுமார் — அம்பாறை
34. N. இராசன் — அம்பாறை
35. யு. சித்திரவேல் — கணபதிபுரம்
36. யு. கனகரெத்தினம் — கணபதிபுரம்
37. P. சுசிபன் — வீரமுனை
38. லு. பிரான்சிஸ் — அம்பாறை
39. லு. இராசதுரை — மல்வத்தை
40. மு. அழகையா — அம்பாறை
41. யு. பரமநாதன் — கணபதிபுரம்
42. நு. யோகனாதன் — கணபதிபுரம்
43. மு. ரவிச்சந்திரன் — மல்வத்தை
44. யு. முருகேகசபிள்ளை — வீரச்சோலை
45. P.பு. பியாந்தன் — வீரச்சோலை
46. தங்கராசா மனோகரன் — வளத்தாப்பிட்டி
47. செல்வன் சிவநாதன் — கோரக்கர்கோயில்
48. தம்பிப்பிள்ளை கந்தையா — தமிழ் டிவிசன், சம்மாந்துறை
49. கறுவல்தம்பி திருச்செல்வம் — வீரமுனை
50. முத்தலிங்கம் செல்லையா — வீரச்சோலை
51. பாலசுந்தரம் — வீரமுனை
52. முருகேசு உதயகுமார் — மல்வத்தை
29.06.1990
53. சங்கரப்பிள்ளை வில்வராசா — வீரமுனை
54. கிருபானந்தம் அமிர்தலிங்கம் — வீரமுனை
55. வேலுப்பிள்ளை திருச்செல்வம் — வீரமுனை
56. இராமநாதன் வாணிதாசன் — வீரமுனை
57. கந்தசாமி விஜயகுமார் — வீரமுனை
58. முருகேசபிள்ளை பத்மநாதன் — வீரமுனை
59. சிந்தாத்துரை செல்வராசா — வீரமுனை
60. சிந்தாத்துரை சம்பந்தன் — வீரமுனை
61. வேலுப்பிள்ளை கதிரமலை — மல்வத்தை
62. காத்தமுத்து நாகேந்திரன் — புதுமல்வத்தை
63. பொன்னுச்சாமி கணேசமூர்த்தி — வீரமுனை
64. பொன்னுச்சாமி கந்தசாமி — வீரமுனை
65. மாசிலாமணி வினாயகமூர்த்தி — வீரமுனை
66. திருநாவுக்கரசு கணேசமூர்த்தி — வீரமுனை
67. கனகரெட்ணம் யோகராசா — வீரமுனை
68. கந்தையா நவரெட்ணம் — வளத்தாப்பிட்டி
69. கிருஸ்ணபிள்ளை சிதம்பரமூர்த்தி — வீரமுனை
70. வினாயகமூர்த்தி பாலு — மல்வத்தை
71. சிவனடியார் ரவிச்சந்திரன் — வீரமுனை
72. தேவநாயகம் மகேந்திரன் — வளத்தாப்பிட்டி
73. வேலுப்பிள்ளை யோகராசா — மல்வத்தை
74. அழகையா ரகுநாதன் — வீரமுனை
75. முருகேசு பாஸ்கரன் — புதுநகர்
76. அழகையா வீரசேனன் — புதுநகர்
77. வேலுப்பிள்ளை தெய்வேந்திரன் — புதுநகர்
78. ஏகாம்பரம் தருமலிங்கம் — புதுநகர்
79. சின்னத்தம்பி வன்னியசிங்கம் — புதுநகர்
80. கந்தையா கணேசமூர்த்தி — வீரமுனை
81. கணபதிப்பிள்ளை பரசுராமன் — மல்வத்தை
82. சந்திரன் அருளப்பன் — வளத்தாப்பிட்டி
83. முத்துலிங்கம் பாலபாஸ்கரன் — புதுநகர்
84. சீனித்தம்பி வேல்முருகு — புதுநகர்
85. மணியம் சோமசுந்தரம் — புதுநகர்
86. வேலுப்பிள்ளை சுதாகரன் — புதுநகர்
87. ஐயாத்துரை கோவிந்தன் — வளத்தாப்பிட்டி
88. பாலன் கேதரன் — கோரக்கோவில்
89. சித்திரவேல் பத்மநாதன் — கோரக்கோவில்
90. சீனி தபசீலன் — கோரக்கோவில்
91. கணபதிப்பிள்ளை சிவபாலன் — வீரமுனை
92. அரசரெட்ணம் மகேந்திரன் — கோரக்கோவில்
93. மாணிக்கம் ஜெகநாதன் — மல்வத்தை
94. வேலுப்பிள்ளை சந்திரகுமார் — மல்வத்தை
95. சுப்பிரமணியம் நடேஸ்வரன் — மல்வத்தை
96. காளிக்குட்டி உலகநாதன் — வீரமுனை
97. சிவானந்தன் பாலச்சந்திரன் — வீரமுனை
98. சிவானந்தன் ரவிச்சந்திரன் — வீரமுனை
99. சிவானந்தன் இந்திரன் — வீரமுனை
100. சித்தாத்துரை தபராசா — புதுநகர்ஃமல்வத்தை
101. சித்தாத்துரை தேவராசா — புதுநகர்ஃமல்வத்தை
102. சாமித்தம்பி கணபதிப்பிள்ளை — புதுநகர்ஃமல்வத்தை
103. கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை — புதுநகர்ஃமல்வத்தை
104. சாமித்தம்பி தங்கவேல் — வீரமுனை
105. மாணிக்கம் முருகேசபிள்ளை — வீரமுனை
106. மார்க்கண்டு யோகராசா — கணபதிபுரம்
107. வேலுப்பிள்ளை நாகேந்திரன் — மல்வத்தை
108. நல்லதம்பி தவராசா — வீரமுனை
04.07.1990
109. பாவில் சண்முகம் — மல்வத்தை
110. பொன்னையா உதயகுமார் — புதுநகர்
111. அழகையா இராமச்சந்திரன் — புதுநகர்
112. கிருஸ்ணப்பிள்ளை மோகனராஜ் — மல்வத்தை
113. தம்பிப்பிள்ளை இராசலிங்கம் — வீரமுனை
114. சொலமன் சகாயநாதன் — வீரமுனை
115. மாணிக்கம் பாலு — தமிழ் டிவிசன், சம்மாந்துறை
116. சங்கரப்பிள்ளை அற்புதராசா
117. ஐயாத்துரை மகேஸ்வரன்
118. பாண்டியன் முனியாண்டி
119. கந்தையா தருமலிங்கம்
120. கதிரவேல் ராதிகாகிருஸ்னன்
10.07.1990
121. பாலன் மகேந்திரன் — கோரக்கர்கோயில்
122. சீனி ஜெயசீலன் — கோரக்கர்கோயில்
123. சீனி இந்திரன் — கோரக்கர்கோயில்
124. குமாரன் சின்னத்தம்பி — கோரக்கர்கோயில்
125. கணபதி சந்திரன் — கோரக்கர்கோயில்
126. கணபதி குகநாதன் — கோரக்கர்கோயில்
127. நல்லதம்பி விக்கினேஸ்வரன் — வீரமுனை
128. செல்லையா வடிவேல் — வீரமுனை
129. நல்லதம்பி வடிவேல் — வீரமுனை
130. கிருஸ்ணப்பிள்ளை சுந்திரலிங்கம் — மல்வத்தை
131. சின்னத்தம்பி குகதாஸ் — கோரக்கர்கோயில்
16.07.1990
132. வைரமுத்து தெய்வானை — புதுநகர்
133. வைரமுத்து கற்பகம் — புதுநகர்
134. கிருஸ்ணப்பிள்ளை விஜயகுமாரி — புதுநகர்
135. இளையதம்பி சின்னப்பிள்ளை — புதுநகர்
136. கணபதிப்பிள்ளை இராஜேஸ்வரி — புதுநகர்
137. சித்தாத்துரை வேவி — புதுநகர்
138. செல்லன் அரளம்மா — புதுநகர்
139. இளையதம்பி செல்லம்மா — புதுநகர்
26.07.1990
140. சின்னத்தம்பி திலகேஸ்வரி — மல்வத்தை
141. பொன்னம்பலம் இராஜேந்திரன் — கணபதிபுரம்
142. மாசிலாமணி செல்வரெட்டினம் — கணபதிபுரம்
143. தர்மலிங்கம் பொன்னுத்துரை — கணபதிபுரம்
144. ஆறுமுகம் கந்தசாமி — வீரமுனை
145. வீரக்குட்டி கிட்ணன் — மல்வத்தை
146. செல்லத்துரை தர்மலிங்கம் — புதுநகர்
147. நடராசா இளங்கோ — மல்வத்தை
08.08.1990
148. சின்னத்துரை காளிக்குட்டி — வீரமுனை
149. சதாசிவம் புவனேந்திரன் — வீரமுனை
150. காத்தமுத்து சண்முகநாதன் — வீரமுனை
151. கதிராமத்தம்பி இராசையா — புதுநகர்
152. மருதுரிஸ் செல்வராசா — வீரமுனை
153. கிருஸ்ணப்பிள்ளை கனகசூரியம் — வீரமுனை
154. கந்தவனம் கந்தசாமி — வீரமுனை
155. கணபதிப்பிள்ளை சண்முகம் — புதுநகர்
11.08.1990
156. க. மாரிமுத்து — வளத்தாப்பிட்டி
157. மார்க்கண்டு தங்கவேல் — மல்வத்தை
158. செல்லையா சோமசுந்தரம் — வீரமுனை
159. வேல்முருகு முத்து — வீரமுனை
160. க. கறுவல்தம்பி — மல்வத்தை
161. மாசிலாமணி தருமலிங்கம் — வீரமுனை
162. இராமக்குட்டி பொன்னம்மா — வீரமுனை
163. அருணாசலம் இராசரெட்ணம் — மல்வத்தை
164. கதிர்காமத்தம்பி கருணாகரன் — மல்வத்தை
165. கதிரவேல் இராஜேந்திரன் — வீரமுனை
166. தங்கநேசம் வேலுப்பிள்ளை — சவளக்கடை
167. வேலுப்பிள்ளை காசியானந்தன் — சவளக்கடை
168. பத்மநாதன் வினாயகமூர்த்தி — சவளக்கடை
169. நாகலிங்கம் மாரிமுத்து — சவளக்கடை
170. பொன்னம்மபலம் இராசமணி — வீரமுனை
171. கனகசபாபதி இளங்கோ — வீரமுனை
172. அழகையா சிவா — வீரமுனை
12.08.1990 — வீரமுனை அகதிமுகாம்
173. முத்துலிங்கம் பரமேஸ்வரி — வீரமுனை
174. முருகுப்பிள்ளை தங்கரெத்தினம் — வீரமுனை
175. கணபதிப்பிள்ளை சிவலிங்கம் — வீரமுனை
176. இராசையா சுபாசினி — புதுநகர்
177. இராசையா பரமேஸ்வரி — புதுநகர்
178. முருகுப்பிள்ளை தங்கராசா — புதுநகர்
179. தம்பிமுத்து தயாபரன் — புதுநகர்
180. முருகுப்பிள்ளை ஞானம்மா — கணபதிபுரம்
181. யோகராசா கிருபானந்தினி — புதுநகர்
182. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் — புதுநகர்
183. கணபதிப்பிள்ளை புஸ்பலதா — புதுநகர்
184. கந்தையா கணபதிப்பிள்ளை — புதுநகர்
185. அருணாசலம் சின்னப்பிள்ளை — புதுநகர்
186. குணரெட்ணம் சிவகௌரி — வளத்தாப்பிட்டி
187. தங்கராசா ராகினி — புதுநகர்
188. வீரபாண்டியன் யமுனா — மல்வத்தை
189. கணபதிப்பிள்ளை தவராசா — வீரமுனை
190. சீனித்தம்பி மாரிமுத்து — வளத்தாப்பிட்டி
191. ரவி தில்லையம்மா — வளத்தாப்பிட்டி
192. அருளப்பா இந்துருஜன் — வளத்தாப்பிட்டி
193. ஆறுமுகம் கலா — புதுநகர்
194. அரசரெட்ணம் வள்ளியம்மை — வீரமுனை
195. இராமன் — வீரமுனை
196. வள்ளியம்மை — மல்வத்தை
197. பி. மாரியான் — வீரச்சோலை
198. கந்தக்குட்டி பாக்கியராசா — மல்லிகைத்தீவு
12.08.1990 — காயமடைந்த பின்னர் கடத்தப்பட்டதாகப் பதிவானவர்கள்
199. தம்பிமுத்து சிந்தாத்துரை — வீரமுனை
200. கந்தையா நடராசா — மல்வத்தை
201. வல்லிபுரம் கந்தசாமி — வள்ளுவர்புரம்ஃமல்வத்தை
15.08.1990
202. அரசரெத்தினம் கதிரமலை — மல்லிகைத்தீவு
203. சாமித்தம்பி குணசீலன் — மல்லிகைத்தீவு
204. திருநாவுக்கரசு புஸ்பராசா — வீரமுனை
205. நல்லதம்பி கோபால் — வீரமுனை


















