உப்பளம் அமைக்கும் நடவடிக்கை-அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு


கொக்குளாய் மத்தியில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் முன்னெடுக்கப்படும் உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு தெரிவித்துமுள்ளது.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குறித்த பகுதியில் நிலைமைகள் குறித்து பார்வையிட்டார்.

தமிழரின் பூர்வீக நிலங்களை பெரும்பான்மைச்சிங்கள இனத்தவர்கள் அத்துமீறி உப்பளம் அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ள நிலையில் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேசச்செயலகம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வனவளத்திணைக்களத்தினர் இது தொடர்பில் பாராமுகமாக இருந்துவருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொதுமக்களின் வேண்டுகோளின்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நேரில்சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினார்.