சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வைப்பு!

 


சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வைப்பு! 


சர்வதேச சிறுவர் தினமான இன்று மட்டக்களப்பு களுவன்கேணி பலாச்சோலை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

 சர்வதேச சிறுவர் தினமான இன்று (01/10/2025) மட்டக்களப்பு களுவன்கேணி பலாச்சோலை ஞானலிங்கேச்சரர் அறநெறி பாடசாலையில் இருந்து மாகாண மட்ட பஞ்சபுராணம்  ஓதல் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், மற்றும் சிறுவர் தினத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக லண்டன் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினரால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

சிறுவர் தின நிகழ்வுக்கு நிதி உதவிகளை வழங்கிய லண்டன் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினருக்கு அறநெறி பாடசாலை நிர்வாகத்தினர் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

இன் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், தமிழரசுக் கட்சியின்  ஏறாவூர் பற்று பிரதேச கிளை தலைவர் நிலக்சன். சேவகம் நிறுவனத்தின் பொருளாளர் கு. சுபோஜன், சேவகம் நிறுவனத்தின் உறுப்பினர் அ. ஜெயராஜ், அறநெறி பாடசாலை ஆசிரியர் அலகேஸ்வரி மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.