வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்



தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு கொடிகாமம் கச்சாய் கிராமத்தில் இந்த நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சாவகச்சேரி கச்சாய் கிராமத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 150 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தென்பகுதியிலிருந்து 150 பணியாளர்கள் இச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியின் ஏனைய கிராமங்களிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும் தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை சுத்தம் செய்யும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.