நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் நு/ அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி விழா 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது.
காலை 7 மணி முதல் இருந்த சுபநேரத்தில் பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கணபதி வழிபாடு இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆக்ரோவா பிரதேசத்திலிருந்து பால்குட பவனி அக்கரப்பத்தனை நகரத்தின் ஊடாக பாடசாலை ஆலயத்தை வந்தடைந்தது.
மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ பால்குடம் எடுத்துவரப்பட்டு சங்காபிஷேக வழிபாடு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.