விளையாட்டுத்துறையின் மூலமே மாணவர்களை நல்ல பிரஜயாக உருவாக்க முடியும் - குளோபல் வின்ங்ஸ் சேரிட்டியின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா


 எமது கிராமத்தில் உள்ள மாணவர்களை சிறந்த வழியில் வழி நடத்துவதற்கு விளையாட்டு துறையே இன்றியமையாதது ஒன்றாகும் அதுமட்டும்மல்லாமல் எமது நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் சிறந்த முறையில் போதை வஸ்து பாவனைஅல்லாத பிரஜயாக நேர்த்தியான வழியில் வழி நடத்துவதற்கு விளையாட்டு துறை மாத்திரமே ஒரு இன்றியமையாத ஒரு துறையாக அமைகின்றது.

 எனவே இந்த மாணவர்களை கல்வி மற்றும் விளையாட்டு துறையில் ஊக்குவிப்பது எமது தலையாய கடமை என குளோபல் வின்ங்ஸ் சேரிட்டியின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா அவர்கள் தெரிவித்தார்

பட்டிருப்பு கல்வி வலையத்திற்கு உட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரி (big match) கிரிகட் அணியின் விரர்களுக்கு  பாதனிகளும் அதனை பயிற்றுவித்த மத்திய விளையாட்டு கழகத்திற்கும் பெருமதியான விளையாட்டு உபகரணங்களும் குளோபல் வின்ங்ஸ் சேரிட்டியின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஸ்ணா அவர்களின் சொந்த நிதியில் வழங்கி வைக்க பட்டது.