2. நாளையும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்.
3. எதிர்வரும் 20.01.2025 முதல் 22.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல சிறிய அளவிலான மழை தொடரும்.
4. எதிர்வரும் 24.01.2025 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது.
5. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 28.01.2025 முதல் 02.02.2025 வரை மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
6. எதிர்வரும் 21.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
7. கிழக்கு மாகாணத்தின் சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை, வாகனேரி, நவகிரி, குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாஓயா, கல்லோயா, மாதுறு ஓயா, கும்புக்கன் ஓயா, யான் ஓயா போன்றன சில இடங்களில் கரை மேவிப் பாய்கின்றன.
8. வடக்கு மாகாணத்தில் இரணைமடு, வவுனிக்குளம், கல்மடு, தண்ணி முறிப்பு, கணுக்கேணி, போன்றனவும் வான் பாய்கின்றன.
9. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் நாளைய தினமும் அவதானமாக இருப்பது அவசியம்.
10. கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கியமை மிகச் சரியான முடிவு. ஏனெனில் தற்போது வரை கிழக்கு மாகாணங்களின் மேற்பரப்பு நீர்நிலைகள் கணிசமான அளவு நீரை வெளியேற்றுகின்றன.
- நாகமுத்து பிரதீபராஜா -