சிவசக்தி விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

 



துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் .

துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்திற்கு கிறிக்கட்  விளையாட்டு உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களினால்  நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

2023ம் வருடத்திற்க்கான  நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட  குறித்த விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (16.08.2024 ) பி.ப 04.00 மணியளவில் துறைநீலாவணை வடக்கு பல்தேவை கட்டிட மண்டபத்தில் சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின்  தலைவர் வயிரமுத்து பிரதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் திரு வினோராஜ், இரா.சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் திரு மதிமேனன் , இணைப்பாளர் சமயலிங்கம் அண்ணாத்துரை ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.