வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தடைகளை தகர்த்து தரிசனம்!!


வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

சிவராத்திரி தின வழிபாட்டுக்காக வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் செல்ல நீண்ட இழுபறியின் பின்னர் காலை 10 மணியளவில் பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் ஒலுமடு பிரதான வீதியில் இருந்து சுமார் 5கிலோமீற்றர் தூரம் காட்டுப்பாதையூடாக நடந்துசென்று பொதுமக்கள் ஆலயத்தினை அடைந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராசா கயேந்திரன், வேலன் சுவாமிகள்,ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.