கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவர்களின் சமூக நோக்கு திட்டம்


கிழக்குப் பல்கலைக்கழக நான்காம் வருட முகாமைத்துவப்பீட மாணவர்களால் வருமானம் குறைந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிற்கு அவர்களின் வருமானத்திற்கு பங்களிக்கும் மற்றும் பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் வகையிலும் கருத்தரங்கு நிகழ்ச்சி மற்றும் விதைகள், மரக்கன்றுகள், உரம் வழங்கள் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு ஆயித்தியமலை வடக்கு பிரிவில் கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக நான்காம் வருட முகாமைத்துவப்பீட மாணவர்களால் மேற்கொள்ளப்படும் கற்கை நெறியில் செயற்பாட்டு ரீதியான அடைவுமட்டத்தை அடையும் வகையில் சமூக நோக்குடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்குப் பங்களித்தல், பசுமை உற்பத்தியின் மூலம் சூழலியல் வளர்ச்சி,வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை ஊக்குவித்தல்,எதிர்கால சமுதாயமும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு முன்னோடியாக இருத்தல் போன்றவற்றை நோக்காக கொண்டு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.