விவசாயிகளுக்கு உரங்களை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை!!


இம்முறை பெரும்போகத்தில் 3 மாவட்டங்களில் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களை செய்கையிடும் 3000 விவசாயிகளுக்கு உரங்களை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதியுதவி தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மாத்தளை, குருணாகல், மொனராகலை மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.