நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து சற்ற முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன மேற்படி செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
காலை 6.30 அளவில், காவல்துறையினர் தமது இல்லத்திற்கு வந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், இது தொடர்பில், காவல்துறைமா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் தொடர்ந்தும் அவரது இல்லத்தின் வளாகத்தில் இருந்து வெளியேறாமல், அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
மருந்தங்கேணி காவல்துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய, ஜயபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்துக்கு விரைந்துள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
