தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி ஜேசுதாசன் கலாராணி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சரத்சந்திரபால, கிழக்கு மாகாண காரியாலய நிருவாக உத்தியோகத்தர் பி.தியாகராஜா, அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி, திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான மா.சசிகுமார், வி.சுபாகரன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நிசந்தி அருள்மொழி, புதுக்குடியிருப்பு இளைஞர் தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி என்.குகதாஷ் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் , மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன, அனைத்து பிரதேச சம்மேளனங்களின் முக்கிய பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 12.06.2023ம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரை எதிர்வரும் 19.06.2023ம் திகதி நிறைவடையவுள்ளது.
இப்பாதயாத்திரையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 300கு மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.