தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 39,000 ஆசிரியர்கள்!!


தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 39,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இம்முறை ஒரே நேரத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருப்பதால், கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே திரு.பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவும் குறிப்பிட்டார்.

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி நியமனம் செய்யப்படவுள்ளனர். தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இருபத்தி ஆறு ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அது இப்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது. சனிக்கிழமை பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. வியாழக்கிழமை தடை செய்யப்பட்டது. சட்டமா அதிபர் மூலம் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை முன்வைப்போம்.

கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் மொழிப் பாடங்களுக்கு ஆறாயிரம் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும். தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தால் விரைவில் 26,000 ஆசிரியர்களை நியமிக்க முடியும்