ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு!!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவது உறுதி எனவும் ஜனக்க ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கான பாராளுமன்ற பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க, அதன் பெறுபேறு தனக்கு தெரியும் எனவும் அதற்கு முகம் கொடுக்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் கட்டளையின் கீழ் இருக்கும் ஒரு பொருத்தமற்ற நபரை நியமிப்பது எளிதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.