அதிக வெப்பநிலை மக்களுக்கு விசேட எச்சரிக்கை!!


நாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலையுடனான வானிலை நிலவும் என்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை இன்று (29) அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது, மேற் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைய போதுமானளவு நீரை பருக வேண்டும்.
அத்துடன், களைப்படையும் நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வெப்பமான வானிலையின் போது வயது முதிர்ந்தவர்களும் நோயாளிகளும் சிறுவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.