ஹெரோயினுடன் 16 வயது சிறுமி ஒருவர் கைது- யாழில் அதிர்ச்சி சம்பவம்!!


யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சிறுமியை கைது செய்துள்ளனர்.

காந்தி ஊரைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.