எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 340 ரூபா.
95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 375 ரூபா.
அத்தோடு, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் 80 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 325 ரூபா.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை ரூபாவினால் 45 குறைக்கப்படுவதோடு, புதிய விலை 465 ரூபா.
மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 295 ரூபா.