அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை பிரதேசத்திற்குட்பட்ட புதுநகர் கிராமத்தில் அமைந்துள்ள புதுநகர் அ.த.க பாடசாலையில் 2022ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வானது நேற்று (2023.03.21) செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய கிராமமான புதுநகர் கிராமத்தில் இருந்து கல்வி கற்று 2022ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபர் திரு.S.சிவயோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பளர் திரு.S.M.M.உமர் மௌலானா அவர்களும், சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.v.ஜெகதீசன் அவர்களும், சிவனருள் பவுண்டேசன் நிறுவ ஐகனத்தின் தலைவர் Dr.அனுசியா சேனாதிராஜா அவர்களும் கலந்துகொண்டதுடன் அயல் பாடசாலை அதிபர்களான விக்னேஷ்வரா வித்தியாலய அதிபர் திரு.S.கிருபைராஜா, விபுலானந்தா வித்தியாலய அதிபர் திருமதி.G.கணேஸ்வரன், சீர்பாத்தேவி வித்தியாலய அதிபர் திரு.A.சதானந்தா, மல்லிகைத்தீவு வித்தியாலய அதிபர் திரு.S.ஜதீஸ்வரா மற்றும் சிவனருள் பவுண்டேசன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் K.வாணன், அபிவிருத்தி உத்தியோகத்தர் K.செல்வானந்தம், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் V.கேதீஸ்வரன் மற்றும் மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சிவனருள் அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபகர் திரு.Dr.J.நமசிவாயம் (UK) அவர்களின் நிதி ஒழுங்குபடுத்துதலில், திரு.செல்வா நிர்மலன் (அவுஸ்ரெலியா) குடும்பத்தின் நிதி அனுசரணையில் குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.