(புருசோத்)
மட்டகளப்பு மாவட்ட சுகாதார பணிமனைக்கு உற்பட்ட பெரியகல்லாறு வைத்தியசாலையில் இன்று சிறிய சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது
பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஞானராஜா சன்ஞய் அவர்களின் தலைமையில் இன்று பெரியகல்லாறு வைத்தியசாலையில் இந்நிகழ்வானது இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்
பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையில் இதுவரையில் சத்திர சிகிச்சை நிலையம் இல்லாத காரணத்தினாலும் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு வருகின்ற கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் மகீழூர் துறைநீலாவணை ஆகிய கிராமங்களில் இருந்து வருகின்ற நோயாளர்களின் சுகாதார நலன் கருதியும் இந்த சிறிய சத்திரசிகிச்சை நிலையமானது பெரியகல்லாறு வாழ்கின்ற மக்களின் பங்களிப்புடனும் இளைஞ்ஞர்களின் ஒத்துழைப்புடனும் இன்று பிரதேச வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டது.
இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் அவர்கள் வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையில் நிலவுகின்ற குறை நிறைகளை தெரிந்து கொண்டு ஆலோசனையும் வழங்கினார்
வருகின்ற காலங்களில் இந்த வைத்தியசாலையை ஒரு திறமையான வைத்தியசாலையாக மாற்றுவதற்காக இங்கே பணிபுரிகின்ற வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என்பவர்கள் திறமையாக செயற்படுவதாகவும் முன்னைய காலங்களைவிட இந்த வைத்தியசாலையில் நோயாளர்கள் அதிக அழவில் சிகிச்சை பெற்று செல்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.











