வடக்கில் காணி பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையில் தெரிவித்தார்.
அண்மையில் 108 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. மீதி காணிகளும் துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
தானும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் ஒன்றாகவே பாராளுமன்றத்துக்கு தெரிவானதாகவும். இனங்களுக்கு இடையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தங்கள் இருவரது கனவாக இருந்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு நல்கவேண்டும் என வலியுறுத்தினார்.
