எத்தனோல் விலை உயர்த்தப்பட்டாலும், மதுபானத்தின் விலையை உயர்த்த மாட்டோம் என மதுபான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதே இதற்குக் காரணம்.
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் பெல்வத்த மற்றும் செவனகல சீனி நிறுவனங்கள் எத்தனோலின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, 1025 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் எத்தனோல் நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எத்தனோல் விலை உயர்த்தப்பட்டாலும், மதுபானத்தின் விலையை உயர்த்த மாட்டோம் என மதுபான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நேரத்தில் மதுவின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
