நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது கொழும்பு- சிலாப பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியை சேர்ந்த 56வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையி்ல் நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
