மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் 10 நாட்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி.

மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவரது சட்டத்தரணியினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

அதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கோட்டை நீதவான் திலின கமகே வழங்கியுள்ளார்.