முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!!


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு முட்டை இறக்குமதிக்கு நேற்று (02) அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சந்தையில் முட்டை விலையில் வரம்பற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு, இந்த அனுமதி கிடைத்துள்ளது.