அதிவேக பாதையில் இருந்து காட்டுக்குள் பாய்ந்த பேருந்து!!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.​

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.​

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.​

யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளாகி உள்ளது.​

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.​

மேலும் குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.