இலங்கைக்கு 75 பேரூந்துகளை வழங்கியது இந்தியா!!


இந்தியா அரசாங்கம் 75 பஸ்களை இலங்கை போக்குவரத்துச் சபையிடம் ஒப்படைத்துள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், நாட்டில் இயக்கம் மற்றும் அணுகல் வசதியை ஆதரிப்பதற்காக இந்த பஸ்கள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் பஸ்கள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியாவின் உதவியுடன் 500 பஸ்கள் இலங்கைக்கு வழங்கப்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.