உணவு விஷமடைந்ததால் 114 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!!


கொக்கலையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 114 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விஷமடைந்ததால் குறித்த தொழிலாளர்கள் ஹபராதுவ, அஹங்கம, இமதுவ உள்ளிட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் ஆரம்பித்துள்ளனர்.