துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!


துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயதுடைய சந்தேகநபரொருவர் கடவத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கடவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொனஹென பிரதேசத்தில்மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே , கைத்துப்பாக்கி மற்றும் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.