வி.சுகிர்தகுமார்
சமுர்த்தி சௌபாக்கியா தேசிய வார வேலைத்திட்டத்தின் கீழ் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி வங்கிகளினூடாக சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கப்பட்டதுடன் மரநடுகையும் இடம்பெற்றது.
இம்மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதி சமுர்த்தி சௌபாக்கியா வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்; ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கிகளில் கடன் வழங்கும் திட்டம் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக இன்று உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மேற்பார்வையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் க.சத்தியப்பிரியன் வங்கி முகாமையாளர்களான எஸ். சுரேஸ்காந்த் கே.கவிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு 10 சுயதொழில் முயற்சியாளர்களுக்கான 25 இலட்சம் ரூபாவை கடனை வழங்கி வைத்தனர்.
தொடர்ந்து வங்கி வளாகத்தில் மரக்கன்றினையும் நாட்டி வைத்தனர்.